கெண்டகி மஞ்சள் மரம்

கெண்டகி மஞ்சள் மரம் என்பதன் அறிவியற் பெயர் Cladrastis kentukea (கிளாடிராசிட்டிசு கெண்டகீய). இது அமெரிக்க மஞ்சள் மரம் என்றும் அறியப்படும். இம்மரம் இயற்கையாக அமெரிக்காவின் தென் கிழக்கில் உள்ள மாநிலங்களில் வளர்கின்றது. வடகரோலினாவின் மேற்கே யிருந்து கிழக்கே ஓக்லகோமா, தெற்கே மிசௌரி மற்றும் இண்டியானா முதல் அலபாமாவின் நடு வரை பரவி யிருக்கின்றது. இம்மரம் ஆங்கிலத்தில் வர்ச்சிலியா (Virgilia) என்றும் சிலபொழுது அழைக்கப்படுகின்றது.

விளக்க வரைவு

கெண்டகி மஞ்சள் மரம் சிறிய அல்லது நடுத்தர அளவான இலையுதிர்க்கும் (குளிர்காலத்தில்) மரம், பெரும்பாலும் 10–15 மீட்டர்கள் (33–49 ft) உயரம் வளரும், ஆனால் சிலவிடங்களில் 27 மீட்டர்கள் (89 ft) உயரம் வரை வளரும். இது அகலமான உருண்டையான தலைமரம் அமைப்பு கொண்ட, பாளம் இல்லாத மொழுக்கென்ற சாம்பல்நிற அடிமரம் கொண்ட மரம். இதன் இலைகள் இறகுவடிவில் கூட்டிலை அமைப்பு கொண்டது ஏறத்தாழ 20–30 cm நீளம் கொண்டது. 5-11 (பெருமாலும் 7-9) சிற்றிலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். சிற்றிலைகள் அகலமாக நீள்வட்ட வடிவில் 6–13 செ.மீ நீளமும் 3–7 cm அகலமும் கொண்டிருக்கும்; இலையின் ஓரங்களும் அடிப்புறமும் நுண்முடிகள் கொண்டிருக்கும். இவ்விலைகள் இலையுதிர் காலத்தில் மஞ்சள், பொன்னிறம் அல்லது செம்மஞ்சள் நிறமாக மாறும்.

பூக்கள் வெண்ணிறத்தில் சரம் சரமாக மரம் முழுக்கவும் சூன் மாதம் பூத்து தொங்கிக்கொண்டிருக்கும். அவை மணமுடையவை. இரண்டு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அதிகம் பூக்கும். இதன் பழம் அல்லது காய் 2-6 விதைகள் கொண்ட நீண்ட காயாக இருக்கும்.

இம்மரத்தின் வயிரம் (மரத்தின் உள்ளகம்) மஞ்சளாக இருப்பதால் மஞ்சள் மரம் என அழைக்கப்பெறுகின்றது.

இம்மரத்தின் ஓரியல்பு நிலத்துக்கு அருகிலேயே குறைந்த உயரத்திலேயே கிளைக்கத் தொடங்குகின்றது. கிளாடிராசிட்டிசு (Cladrastis) என்னும் அறிவியற்பெயர் இதனைக் குறிப்பிடுகின்றthumbது. அறிவியற்பெயரில் உள்ள kentukea (கெண்டகீய) என்பது கெண்டகியில் இருந்து (வந்த) என்னும் பொருள் தருவது.

பரவல்

இம்மரம் அரிதாகக் காணப்படும் ஒரு மரம். பெரும்பாலும் வட அமெரிக்காவில் தெங்கிழக்கில் இயற்கையாக வளரும் ஓர் மர இனம். முதன்மையாக அமெரிக்காவின் கெண்டகி, தென்னிசி, வட கரோலினா ஆகிய மாநிலத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் பாறை மலைகளில் காணப்படுகின்றது. ஆனால் வடக்கே கனடாவில் தென் ஒண்டாரியோ வரையிலும் அரிதாக வளரக்கூடியவை.

இம்மஞ்ச்சள் மரத்திலேயே மிகப்பெரிய ஒரு மரம் ஒகையோ மாநிலத்தில் சினிசினாட்டி நகரத்தில் இளவேனில் தோட்ட செமிட்டிரி (Spring Grove Cemetery) என்னும் இடத்தில் காணப்படுகின்றது. இது 22 மீ உயரமும் 2.2 மீ அடிமர விட்டமும் கொண்டது. ஒல்லியான ஆனால் உயரமான மரம் 27 மீ உயரமும் 0.55 மீ அடிமர விட்டமும் கொண்டது. இம்மரம் சியார்ச்சியாவில் உள்ளது.

அலபாமாவில் உள்ள மரங்களில், இலைகள் அடர்த்தியான முடிகளுடன் காணப்படுகின்றன.

பயன்பாடுகள்

இம்மரம் பெரும்பாலும் மேசை, நாற்காலி போன்றவை செய்யவும், துப்பாக்கிகளின் அடிப்பகுதி (தோளில் பொருத்தும் பகுதி) செய்யவும், கைப்பிடிகள், கருவிகள், மரக் கைவினைப்பொருள்கள் செய்யவும் பயன்படுகின்றது.

வெளி இணைப்புகள்

கெண்டகி மஞ்சள் மரம் – விக்கிப்பீடியா

Cladrastis kentukea – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *