கிளுவை (இதன் அறிவியல் பெயர் Commiphora caudata, Engl.; Burseraceae) என்பது வேலிக்காக வளர்க்கப்படும் சிறுமரவகை. இது முக்கூட்டு இலைகளையும், மென்மையான கட்டையினையும் உடைய இலை உதிர் மரம். இதில் சிறு கிளுவை, பெருங்கிளுவை என இருவகைகள் உள்ளன. இவை முறையே செங்கிளுவை, வெண் கிளுவை எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. வெண் கிளுவையின் இலை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இம்மரம் திருக்கடைமுடி என்னும் கோயிலில் தலமரமாக உள்ளது.
வெளி இணைப்புகள்
Commiphora caudata – Wikipedia