திருவோட்டுக்காய் மரம்

“திருவோட்டுக்காய்” (Calabash Tree) என வழங்கப்படும் சிறுமரம் கிரெசென்சியா குஜெட் (Crescentia cujete) என்ற தாவரவியல் பெயரால் வழங்கப்படுகிறது. இத்தாவரம் பிக்னோனேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. தென் அமொpக்காவின் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. கிரெசென்சியா போசனத்தில் ஏழு சிற்றினங்கள் காணப்பட்டாலும் கிரெசென்சியா குஜெட் என்னும் சிற்றினம் அதன் அழகியல் மதிப்பு காரணமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடைந்து வருகிறது.

திருவோட்டுக்காய் மரம் சிறியதாகவும் 10 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டதாகவும் நேரான தண்டுடனும் அகன்ற கிளைப்படர்வு கொண்டதாகவும் காணப்படும். இதன் பட்டை மென்மையான தோற்றம் கொண்டதாகவும் வெண் சாம்பல் நிறம் கொண்டதாகவும் காணப்படும். இலைகள் அடிப்பகுதியில் அகன்றும் நுனிப்பகுதியில் சிறுத்தும் காணப்படும். பொpய கிளைகள் அல்லது தண்டின் முதிர்ச்சியடைந்த பகுதியில் பூக்கள் தனித்தோ கொத்து கொத்தாகவோ ஆண்டு முழுவதும் தோன்றும். பூக்கள் காம்புடன் குழல் வடிவில் காணப்படும். பழங்கள் ‘பூசணி’ வகை போன்று காணப்படும். பழங்கள் கண்கவர் தோற்றத்துடனும் மெதுவாக முதிர்ச்சியடையும் பண்புடனும் காணப்படுவதால் ஏழு மாதங்கள் வரை மரத்திலேயே இருக்கும். இப்பழங்கள் சேமிப்புக் கலன்கள், அழகுப்பெட்டிகள், இசைக் கருவிகள் போன்ற பொருட்கள் செய்யவும் பயன்படுகின்றன. இதன் பழச்சதை மூச்சிறைப்பு உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளுக்கும் மலச்சிக்கலைத் தீர்க்கவும் குடற்புழுவை அழிக்கவும் வயிற்றெhpச்சலைக் கட்டுப்படுத்தவும் நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

வெளி இணைப்புகள்

திருவோட்டுக்காய் மரம் – விக்கிப்பீடியா

Crescentia cujete – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *