நூக்கம், சிசே அல்லது தால்பெர்சியா சிசூ (Dalbergia sissoo) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஒருவகை பசுமையான ஈட்டிமரவகையாகும். இது பொதுவாக வட இந்திய ரோசுவுட் எனவும் சீஷம் எனவும் டாலி அல்லது தால் மரம் எனவும் இருகுடுசாவா எனவும் அழைக்கப்படுகின்றது. இது இந்தியத் துணைக் கண்டத்திலும் தெற்கு ஈரானிலும் காணப்படுகின்றது. பாரசீகத்தில் ஜாகு எனப்படுகின்றது. இது பஞ்சாப் மாநிலத்தின் மாநில மரம் ஆகும். பாக்கித்தானிய பஞ்சாபிலும் மாகாண மரமாக உள்ளது. இது முதன்மையாக ஆற்றங்கரைகளில் 900 மீட்டர்கள் (3,000 ft) குறைந்த தரைமட்டம் உள்ள இடங்களில் வளர்கின்றது. இருப்பினும் 1,300 m (4,300 ft) உயரங்களிலும் இதனைக் காணலாம். இந்த மரம் வளரும் இடங்களின் வெப்பநிலை சராசரியாக 10–40 °C (50–104 °F) ஆகவும் மிகக் குறைந்தளவு வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே கிட்டத்தட்ட 50 °C (122 °F)க்கும் உள்ளது. ஆண்டுக்கு 2,000 மில்லிமீட்டர்கள் (79 in) வரையிலான மழையையும் 3-4 மாத வறட்சியையும் தாங்கவல்லது. மண்வளம் மணல், கற்களிலிருந்து ஆற்றங்கரை வண்டல் மண் வரையிலும் வளர்கின்றது. உப்புநீர் மண்ணிலும் இது விளையும். கறையான் தாக்குதலைத் தாங்கக்கூடிய மரம் இதுவாகும்.
About the author
Related Posts
September 17, 2021
இராமநாதபுரம் மண்டை நாய்
July 9, 2021
ஆமணக்கு மரம் | Ricinus
October 4, 2021