புறா மரம்

புறா மரம்

வகைப்பாடு

தாவரவியல் பெயர் : டேவிடியா இன்வாலு கிரேட்டா (Davidia Involucrate)

குடும்பம் : டேவிடியேசியீ (Davidiaceae)

இதரப் பெயர்கள்

  • ஆவிமரம் (Ghost Tree)
  • கைகுட்டை மரம் (Pockethand Kerchief Tree)
  • மரத்தின் அமைவு

    இம்மரத்தைப் பற்றி சீனாவின் இயற்கையாளரும் பிரஞ்சு மிசினினரியுமான அர்மண்ட் டேவிட் என்பவர் முதன் முதலில் விளக்கினார். இதனால் இதற்கு இவர் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.

    இது 50 முதல் 70 அடி உயரம் வளரக் கூடியது. கூம்பு வடிவில் இருக்கும். இதனுடைய இலைகள் இதய வடிவில் உள்ளது. இம்மரத்தில் உள்ள பூக்கள் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. உருண்டையான மலர் கொத்தில் ஆண் பூக்கள் பலவும், ஒன்றிலிருந்து பல இருபால் பூக்களும் உள்ளன. இதன் அடியில் இரண்டு பூவடிச் செதில் இலைகள் சந்தன வெள்ளை நிறத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். இது 15 செ.மீ. நீளத்திற்கு ஒன்று பெரியதும் மற்றும் சிறியதுமாக இருக்கும். இது பார்ப்பதற்கு பச்சை இலைகளின் இடையே புறா உட்கார்ந்து இருப்பது போல தெரியும் இதனால் இதற்கு புறா மரம் என்று பெயர் வந்தது. இதனுடையே கனி, பூ முடிந்தவுடன் வரும். இலைகள் கொட்டிவிடும். விதை கல்போன்று இருக்கும்.

    காணப்படும் பகுதிகள்

    இது மேற்கு சீனாவில் வளர்கிறது

    வெளி இணைப்புகள்

    புறா மரம் – விக்கிப்பீடியா

    Davidia involucrata – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *