டையூன் இடுலி மரம்

டையூன் இடுலி (Dioon edule) என்பது ஒரு தாவரமாகும். இது மெக்சிக்கோவைச் சேர்ந்தது. இது பால்மா டி லா வர்ஜன் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தாவரவகை மிக பழமையான விதை தாவரமாகும். இவைற்றின் புதைபடிவங்கள் டைனோசர் வாழ்ந்த காலத்திலேயே கிடைக்கின்றன. இது Zamiaceae என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த்தாகும். இது Cycadales என்ற பேரினத்தைச் சேர்ந்தது.

இதில் இரண்டு கிளையினங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. அவை பின்வருமாறு,

  • Dioon edule subsp. augustifolium
  • Dioon edule subsp. edule
  • இந்த மரம்தான் உலகில் மிக மிக மெதுவாக வளரக்கூடிய மரமாகும். மெக்சிகோ நாட்டின் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு மரம் ஆறு அடி ஆறு அங்குலம் வளர 1000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மெக்சிகோவிலிருந்து இதன் விதை கொண்டுவரப்பட்டு, ஏற்காடு தாவரவியல் பூங்காவில் 1990 இல் ஒரு கன்று உருவாக்கப்பட்டது. இது நடப்படுடு 25 ஆண்டுகள் ஆன நிலையிலும் சில அங்குல உயரம் மட்டுமே வளர்ந்துள்ளது. இந்தத் தாவரத்தின் அடிப்பாகம்கூட, இன்னமும் தரையைவிட்டு வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    வெளி இணைப்புகள்

    டையூன் இடுலி மரம் – விக்கிப்பீடியா

    Dioon edule – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *