கருவேம்பு (garuga) என்பது ஒரு தாவரம் ஆகும். இந்த மரத்தைப்போல் பல வகையான தாவரங்கள் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் காணப்படுகிறது. இவை பொதுவாக இலைகளை உதிர்த்து பூக்களை மட்டும் கொண்டு காட்சி தரும். இதன் கனி மருந்துப்பொருளாகப் பயன்படுகிறது. பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 200 அடி உயரத்தில் வளரும் தன்மையுடையது. இத்தகைய தாவரம் சொலமன் தீவுகள்,ஆஸ்திரேலியா, தென்கிழக்காசியா, மேலேசியா, மெலனீசியா போன்ற இடங்களில் காணப்படுகிறது.