பாசில் மரம்

பாசில் மரம்

வகைப்பாடு

தாவரவியல் பெயர் : சிங்கோ பைலோபா Gingko biloba

குடும்பம் : சிங்கோசியீ (Gingkoaceae)

இதரப் பெயர்

. கன்னிக்கூந்தல் மரம் (Maidenhair tree)

மரத்தின் அமைவு

இது உயிருடன் இருக்கும் ஒரு பாசில் மரமாகும். இது கார்பனிபெரஸ் காலம் முதல் அதாவது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னிருந்து பாசிலில்களாக அகப்படுகின்றன. சிங்கோ சாதியின் இந்த இனம் ஒன்றே நிலைத்திருக்கிறது. 10-20 கோடி ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் அடையாமல் அப்படியே இருந்து வருகிறது. இது மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பும், அதகன்ற இலைகளுக்குள்ள மரஞ்செடிகள் தோன்றுவதற்கு முன்பும் தோன்றி வளர்ந்த மரமாகும். மேலும் இது உலகின் மிகவும் பழமையான பூக்கும் தாவரம் ஆகும்.

மரத்தின் சிறப்பு

இம்மரம் 130 அடி உயரம் வரை வளரக்கூடியது. இம்மரத்தின் பட்டை சிவப்பாக இருக்கும். இவைகளில் ஆண்மரம், பெண்மரம் எனத் தனித்தனியாக இருக்கிறது. இதனுடைய இலை மிக அழகாக இருக்கும். விசிறி போன்ற வடிவில் இருக்கும். இலையின் நரம்புகள் அடியிலிருந்து பிரிந்து விளிம்பைப் போல் சேரும். இதனால் இதைக் ‘கன்னிக்கூந்தல் மரம்’என்று அழைப்பார்கள். இவ்விலைகள் விழும் சமயத்தில் தங்க நிறமாக மாறும். இது உறையில்லாத விதையுள்ள மரம். இதில் கனி என்பது விதையே ஆகும். இதன் விதையை வறுத்து சாப்பிடலாம்.

காணப்படும் பகுதிகள்

இம்மரம் சீனாவில் காணப்படுகிறது. சிங்கோ என்பது சீன்பெயர் ஆகும். இம்மரங்களை தெருக்களின் இருபுறமும் அழகிற்காக நடுகிறார்கள்.

வெளி இணைப்புகள்

பாசில் மரம் – விக்கிப்பீடியா

Ginkgo biloba – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *