கிளைப்பனை மரம்

கிளைப்பனை என்பது பாமேசீயீ Palmaceae குடும்பத்தை சார்ந்த ஒரு அலங்காரத் தாவரமாகும்.

வகைப்பாடு

தாவரவியல் பெயர் : ஹைபினே திபைக்கா Hyphaene thebaica

குடும்பம் : பாமேசீயீ Palmaceae

இதரப் பெயர் : மாமா (Mama) இஞ்சி ரொட்டி மரம் (Ginger bread )

மரத்தின் அமைப்பு

இம்மரம் மிகவும் ஆச்சரியமான தோற்றம் உடையது. இது 10 முதல் 30 அடி உயரமும், ஒரு அடி விட்டமும் உடையது. கிளைகள் இரண்டு இரண்டாகவே பிரிந்து செல்லும் பனைக் குடும்பத்தில் கிளை விட்டு வளரக்கூடியது.

இலை அமைவு

இந்த இனம் மட்டுமே. கிளையின் உச்சியில் இலைகள் 20 முதல் 30 உள்ளது. ஆண் பூக்கொத்து, பெண் பூக்கொத்து தனித்தனியாக 4 அடி நீளம் உடையது. இதில் ஆரஞ்சு நிறத்தில் பழங்கள் வருகின்றன.

பயன்கள்

இது இஞ்சி மற்றும் ரொட்டி போன்ற நிறமும், வாசனையும், சுவையும் உடையது. மேலும் இவற்றை சாப்பிடலாம்.

காணப்படும் பகுதிகள்

இம்மரங்கள் முதலில் நைல்நதி ஓரத்தில்தான் காணப்பட்டது. இதன் வித்தியாசமான அமைப்பின் காரணமாக பல நாடுகளில் இது அழகுக்காக நடப்பட்டு வருகிறது.

வெளி இணைப்புகள்

கிளைப்பனை மரம் – விக்கிப்பீடியா

Hyphaene thebaica – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *