புங்கை மரம்

புங்கை அல்லது புங்கு அல்லது பூந்தி அல்லது கிரஞ்ச மரம் (Millettia pinnata) என்னும் இத்தாவரம் பட்டாணி சார்ந்துள்ள பேபேசியேக் குடும்பத்தைச் சார்ந்தது. இது வெப்பமண்டலப் பகுதிகளான ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இது இந்தியா மட்டும் அல்லாது சீனா, சப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளிலும் காணப்படுகிறது.

பயன்கள்

  • புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை. தீப் புண்களை ஆற்றும் சக்தி புங்கை மரத்தின் பட்டைக்கு உள்ளது. புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை -இவை மூன்றையும் நன்கு அரைத்து புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.
  • புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்
  • பல் துலங்க புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.
  • புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.
  • புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது. புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
  • புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும். இதில்லாமல், புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் ஆறும். புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்<

சங்க இலக்கியத்தில்

சங்ககால நூல் குறிஞ்சிப் பாட்டு இதன் பூவைக் குறிப்பிடுகிறது. குறிஞ்சி நிலத்து மகளிர் பல்வேறு வகையான மலர்களைக் குவித்து விளையாடியபோது இதனையும் சேர்த்துக் குவித்தார்களாம்.

சங்கப்பாடல்களில் ஒன்று இதனைப் ”புன்கு” எனக் குறிப்பாடுகிறது.

வெளி இணைப்புகள்

புங்கை மரம் – விக்கிப்பீடியா

Millettia pinnata – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.