செவிலி மரம்

செவிலி மரம் (Nurse tree) என்பது வேகமாக வளரும் பெரிய மரம் ஆகும். இது சிறிய, மெதுவாக வளரும் மரம் அல்லது தாவரங்களுக்கு அடைக்கலம் தருகிறது. செவிலி மரம் நிழல், காற்றிலிருந்து பாதுகாப்பான தங்குமிடம் அல்லது சிறிய சிறிய தாவரங்களை உண்ணும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

எடுத்துக்காட்டாக, நோர்வே ஸ்ப்ரூஸ் (பைசியா அபீசு) மற்றும் லார்ச் (லாரிக்சு) ஆகியவை வன்மரங்களுக்கு செவிலியராக செயல்பட முடியும். சோனோரன் பாலைவனத்தில், பாலோ வெர்டே, அயர்ன்வுட் அல்லது மெசுகைட் மரங்கள் இளம் பெரிய சப்பாத்தி கள்ளிக்குச் செவிலி மரங்களாகச் செயல்படுகின்றன. பெரிய சப்பாத்திக் கள்ளி பாலைவனத்தில் வளரும்போது, சூரிய வெப்பத்தினை தாங்கும் தகவமைப்பினைப் பெற்றுவிடுகிறது. பழைய மரம் அழிந்து விடுகிறது. சப்பாத்தி கள்ளி தனியாகக் காணப்படும். இதனால் நாம் பாலைவனத்தில் பெரிய சப்பாத்திக் கள்ளி தனியாகக் காணப்படுவதைக் காணலாம். பெரிய சப்பாத்தி கள்ளி பெரிதாக வளரும்போது, அதன் செவிலி மரத்துடன் வளங்களுக்காகப் போட்டியிடலாம். இதனால் மரணத்தை விரைவுபடுத்துகிறது. இதன் விளைவாக, இளம் சப்பாத்தி கள்ளியே பெரும்பாலும் செவிலி மரங்களுக்கு அருகில் காணப்படுகின்றன, ஆனால் பழைய சப்பாத்திக் கள்ளிகள் தனித்துக் காணப்படும்.

வெளி இணைப்புகள்

செவிலி மரம் – விக்கிப்பீடியா

Nurse tree – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *