சவ்வரிசி (இலங்கையின் சில பகுதிகளில்: சௌவரிசி) (Metroxylon sagu) பாமே குடும்பத்தைச் சேர்ந்த மெட்ரோசைலோன் பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது அயன மண்டலத்துக்குரிய தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, பப்புவா நியூ கினி, மலேசியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.
பயன்பாடும் தயாரிப்பும்
சவ்வரிசித் தாவரத்திலிருந்து பெறப்படும் சோறு (Pith) எனும் நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்துத் தூளாக்கப்படுகின்றது. இது மாப்பொருள் மணிகளாக மாற்றப்படும். இவ்வாறு பெறப்படும் சவ்வரிசி மணிகள் சூப் வகைகள், கேக் வகைகள், மாக்கூழ்கள் (puddings) போன்றவை தயாரிப்பதற்கு உபயோகிக்கப்படுகின்றது.
வெளி இணைப்புகள்
ஜவ்வரிசி மரம் – விக்கிப்பீடியா