கலிபோர்னியா செம்மரம் (அறியவில் பெயர்: செக்கோயா செம்பெர்வைரன்சு, ஆங்கிலத்தில் Sequoia sempervirens) என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் மிக உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 1200 – 1800ஆண்டுகள் வரையோ அல்லது அதற்கு மேலே கூட வாழும். அதிக (பெரும) அளவாக 115 மீட்டர் உயரமும், 8 மீட்டர் சுற்றளவும் கொண்டதாக வளரக் கூடியது. இம்மரம் கலிபோர்னியாவின் கடற்கரைப் பகுதி, ஓரிகன் மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
கலிபோர்னியா செம்மரம் மரம் – விக்கிப்பீடியா
Sequoia sempervirens – Wikipedia