பராய் (Streblus asper) அல்லது புராமரம் என்பது ஒருவகை மரமாகும். இது பிராய், பிறமரம், குட்டிப்பலா என்றும் குறிப்பிடப் படுகிறது. சுரசுரப்பான கரும்பச்சை இலைகளையுடைய வெள்ளை நிற மரம். இம்மரம் புதற்காடுகளில் காணப்படும், இதன் பால், பட்டை, இலை ஆகியவை மருத்துவ குணமுடையவை.திருப்பராய்த்துறை திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது பராய் மரமாகும்.