நாவல் மரம் பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் உரியது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரையும் வாழும். இம்மரத்தின் நாவற்பழம் செங்கருநீல நிறமுடையதாகவும் இனிப்பான சுவையுடையதாகவும் இருக்கும்.
துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களில் நாவல் பழம் அறியப்படுகிறது. இதில் கருநாவல், கொடி நாவல், சம்பு நாவல் என வகைகள் உள்ளன.
நாவற்பழம்
நாவற்பழம் பழவகைகளில் ஒன்று ஆகும். இப்பழம் குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே கிடைக்கும்.