கரு மருது என்பது ஒரு மர வகையாகும். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.
சங்க காலத்தில் மருதம்
சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர்.
மருத மரம் ஆற்றோரங்களிலும் வயலோரங்களிலும் செழித்து வளரும்.
மருத மரத்தில் வெண்மருது கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு. பில்லமருது வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.
வெளி இணைப்புகள்
கரு மருது மரம் – விக்கிப்பீடியா