பூவரசு மரம்

பூவரசு (Thespesia populnea) சிறிய மரவகையைச் சார்ந்தது. வெப்பவலயப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இம் மரம், 5-10 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.

குடசம்

குடசம் என்னும் மலரைக் குறிஞ்சிப்பாட்டு வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன. இதனை இக்காலத்தில் பூவரசம் பூ என்கின்றனர். பூவரச மரம் ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.

சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.

வெளி இணைப்புகள்

பூவரசு மரம் – விக்கிப்பீடியா

Thespesia populnea – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *