கருவேல மரம்

கருவேலமரம் அல்லது கருவமரம் என்பது காடுகளில் வளரும் முள்மரம். (Acacia nilotica) இது ஆபிரிக்கா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தை தாயகமாகக் கொண்டது. கருவேலமரம் தமிழகத்தில் பயனுள்ள மற்றும் பாரம்பரியம் மிக்க மரங்களுக்கு ஒன்றாக கருதப்படுகிறது.

பெயர் குழப்பங்கள்

தமிழ் நாட்டில் இயற்கையாக வளரும் கருவேலமரத்தையும் (Acacia nilotica), சீமையில் (வெளியில்,பெயர் காரணமும் அதுவே) இருந்து அறிமுகப் படுத்திய சீமை கருவேலமரத்தையும் (Prosopis juliflora) ஒத்து இருந்ததாலும் இந்த குழப்பம். ஆனால் அடிப்படையில் இவ்விரண்டும் வெவ்வேறு மரங்களாகும்.

பயன்பாடு

  • இதன் இலைகளையும், நெற்றுகளையும் வெள்ளாடுகள் விரும்பி உண்ணும்.
  • இதன் உலர்ந்த நெற்றுகளை ஆட்டினால் அவற்றிலுள்ள விதைகள் கலகல என ஒலிக்கும். சிறுமியர் இதன் நெற்றுகளைக் கட்டிச் சலங்கை போல் கால்களில் கட்டிக்கொண்டு நடந்து மகிழ்வர்.
  • இந்த மரத்தில் ஒழுகும் கோந்து (gum) எழுதுதாள்களை (paper) வன்மையாக ஒட்ட உதவும்.
  • கருவக்காய்களைக் கொஞ்சம் நீர் ஊற்றி இடித்து வடித்துத் தேங்காய் உடைத்த கொட்டாங்குச்சிகளில் ஊறவைப்பர். ஊறிய நீரை வெய்யிலில் காயவைப்பர். அதன் சாறு கெட்டியானதும் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ளும் பொட்டுக்குப் பயன்படுத்துவர். நன்றாக உலர்ந்து கெட்டியான இதன் பாலில் சொட்டு நீர் ஊற்றிக் குழைந்தும் பொட்டாகப் பயன்படுத்துவர். இந்தப் பொட்டு நிழலாடும். அதாவது அந்தப் பொட்டுக்குள் அடுத்தவர் தன் முகத்தைப் பார்க்கலாம்.
  • கருவங்குச்சிகளை ஒடித்துப் பல் துலக்கப் பயன்படுத்துவர். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழமொழி.
  • கருவமரம் வயிரம் பாய்ந்திருந்தாலும் அதனை வீடுகளுக்குப் பயன்படுத்தக்கூடாது எனக் கூறுவர். காரணம் காயக்காய இது முறுக்கிக்கொள்ளும்.
  • அடிக்குறிப்பு

    ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
    நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
    நாலு = நாலடியார் என்னும் தமிழ்நூல்.
    இரண்டு = இரண்டு அடிகளாலான திருக்குறள் என்னும் நூல்.

    வெளி இணைப்புகள்

    கருவேலம் மரம் – விக்கிப்பீடியா

    Vachellia nilotica – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *