வெர்னோனியா சேவாராயன்சிஸ் மரம்

வெர்னோனியா சேவாராயன்சிஸ் (Vernonia Shevaroyensis) என்பது ஒரு மரமாகும். இத்தாவரம் தமிழகத்தின், ஏற்காடு மலைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை. இதனால் இப்பெயர் இதற்கு வந்தது. இத்தாவரம் சூரியகாந்தி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சூரியகாந்தி குடும்பத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன என்றாலும், அவற்றில் வெறும் மூன்று வகைகள் மட்டுமே மரமாக வளரக் கூடியவை. அவற்றில் ஒன்றுதான் வெர்னோனியா சேவாராயன்சிஸ் மரம். ஒரு காலத்தில் ஏற்காடு மலைப் பகுதிகளில் இயல்பு தாவரமாக இருந்த இந்த மரங்கள் அழிந்துவிட்டன. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காடு காட்டுப் பகுதியில் எஞ்சி இருந்த 2 தாய் மரங்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இந்நிலையில் ஒரேயொரு தாய் மரம் மட்டும் ஏற்காடு தாவரவியல் பூங்காவில் வளர்க்கப்பட்டுவருகிறது. இந்த மர வகையில் உலகில் எஞ்சியுள்ள ஒரே மரம் இதுதான் என்கின்றனர் தாவரவியல் ஆய்வாளர்கள்.

வெளி இணைப்புகள்

வெர்னோனியா சேவாராயன்சிஸ் மரம் – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published.