வஞ்சி என்பது ஒரு வகை மரம். இம்மரம் 10 மீட்டர் வரை வளரும். இம்மரமானது குடைகள், நாற்காலிகள் முதலியன செய்ய பயன்படுகிறது. இதன் பழங்கள் சாப்பிடக்கூடியவையாக இருக்கிறது.
வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று.
புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் வஞ்சிமாநகரம் ‘வஞ்சி’ எனப் பெயர்பெற்றது.
வஞ்சிமரத்துக்கும், வஞ்சிமாநகருக்கும் வேறுபாடு தெரிவதற்காக வஞ்சிமாநகரம் ‘பூவா வஞ்சி’ எனப் போற்றப்பட்டது.