முதிரை மரம்

முதிரை (Chloroxylon swietenia) என்பது காடுகளில் வளரும் ஒருவகை மரமாகும். இது மரத்தை அரித்து உறுதியான பலகை பெறப்படுகிறது. இந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் உறுதியானதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை வைரம் என்பர்.

இலங்கையில்

இந்த முதிரை மரம் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிக் காடுகளிலும் வடமத்திய பகுதியிலும் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் உள்ளன. இந்த மரம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. பாலை மரம் போன்றே, முதிரை மரங்களையும் தறிப்பதற்கு சட்டப்படியான அனுமதி பெறல் வேண்டும். ஆனால் அனுமதியின்றி இம்மரங்களை தறித்து கடத்தல் செய்வோர் உள்ளனர். இதனைத் தடுப்பதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் இருந்தாலும், கடத்தல் நடந்தவண்ணமே இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வன்னி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் இருந்த வேளை இவை முற்றாக தடுக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் சட்ட அனுமதி இன்றி முதிரை மரங்களை தறித்தலும், கடத்தலும் இடம்பெறுகின்றன.

வெளி இணைப்புகள்

முதிரை மரம் – விக்கிப்பீடியா

Chloroxylon swietenia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *