வெட்டிவேர் (Chrysopogon zizanioides) என்பது புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. இப்புல் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. உயரமான தண்டையும் நீண்ட தாள்களையும் கொண்டிருக்கும். இதன் பூக்கள் பழுப்பு கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டில் இருந்து நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியது. விலாமிச்சை வேர் என்று அறியப்படும் வெட்டி வேர்ஒரு பாதுக்கப்பட வேண்டிய அபூர்வ தாவரமான இது 1689 வாக்கில் பூக்கும் நிலையை முடித்துக்கொண்டது. ஐத்தி, இந்தியா, சாவா ஆகிய நாடுகளில் இது பரவலாக வளர்க்கப்படுகிறது.
பெயர்கள்
விழல்வேர், விரணம், இருவேலி, குருவேர் போன்ற வேறு பெயர்களை இது உடையது. புல்லுக்கும் வேருக்கும் இடைப்பட்ட பகுதியை வெட்டி எடுத்து பயிரிடப் பயன்படுவதால் ‘வெட்டிவேர்’ எனப் பெயரும், ஆற்றின் இருகரைகளிலும் வேலியாக அமைந்து மண் அரிப்பைத் தடுப்பதற்காகப் பயன்பட்டதால் ‘இருவேலி’ எனும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
பயன்கள்
இதன் வேர் மண்ணரிப்பைத் தடுக்க உதவுகிறது. வெட்டி வேர் நறுமண எண்ணெய்கள் செய்யவும், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
வெளி இணைப்புகள்
Chrysopogon zizanioides – Wikipedia