விராலி என்பது சோடியெபரி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர வகை ஆகும். இது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல, மிதவெப்ப மண்டலப் பகுதிகளிலுளில் பரவியுள்ளது.
விளக்கம்
இது தமிழகமெங்கும் புதர் காடுகளில் வளர்கிறது. இது வறச்சியைத் தாங்கி வளரக்கூடியது. இது காம்புள்ள சாறற்ற மேல் நோக்கிய இலைகளையும் சிறகுள்ள விதைகளையும் கசப்பான பட்டையும் கொண்ட குறுஞ்செடி ஆகும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
மருத்துவப்பயன்கள்
விராலியானது எலும்பு வலிமையாக்கல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல் ஆகிய பயன்களையுடையது.
விராலி இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக வைத்துக்கட்டி வரக் கட்டி அமுங்கி விடும் அல்லது உடைந்து விரைவில் ஆறும். வீக்கம் கரையும்.
விராலிப் பட்டையை அரைத்துப் பற்றிட வீக்கங்கள் விரைவில் கரையும்.
விராலி இலையை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வலி உள்ள இடத்தில் தேய்த்து வர வலி குறையும்.