யானைக் காது மரம்

யானைக் காது மரம் (Enterolobium cyclocarpum), பொதுவாக இது guanacaste, caro caro என அறியப்படும் ஒரு பூக்கும் மர இனத் தாவரம். இது பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த, பபேசியே தாவரம். இது அமெரிக்காவின் வெப்பவளையப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. இது நடு மெக்சிகோவில் இருந்து வடக்கில் பிரேசில் மற்றும் வெனிசுவேலா வரையில் பரவியுள்ளது. இதன் முற்றிய விதைக் காய்கள் அசைக்கும்போது அதனுள் உள்ள விதைகளால் சலசலக்கும் ஒலியைத் தரக்கூடியன, காய்கள் கேடயம் போன்று பட்டையாக யானையின் காதைப்போன்ற தோற்றத்திற்காகவும் அறியப்படுகிறது. இதனாலேயே இந்த மரம் இப்பெயரையும் பெற்றது. இந்த மரங்கள் குறிப்பாக கோஸ்ட்டா ரிக்காவின் குவானா காஸ்ட் மாகாணத்தில் பெருமளவு காணப்படுகிறன. இவை அவற்றின் அளவைப் பொறுத்து நல்ல நிழல்தரும் மரங்களாக உள்ளன. இந்த மரம் கோஸ்டா ரிக்கா நாட்டின் தேசிய மரமாகும்..

இவை பெரும்பாலும் வட அமெரிக்காவில் யானைக்காது மரம் (elephant-ear tree) என அதன் காய்களின் வடிவைக்கொண்டு குறிப்பிடப்படுகிறது. இதன் பிற பெயர்களாக பிசாசு காது (Devil’s ear) மற்றும் இயர்போட் மரம் (earpod tree), parota மற்றும் orejón (எசுப்பானியம்) அல்லது huanacaxtle (நாகவற் மொழி). எல் சால்வடோரில், இது கோனகாஸ்டி (conacaste) என அறியப்படுகிறது.

விளக்கம்

இந்த மரங்கள் நடுத்தர அளவில் இருந்து பெரிய அளவுவரை உள்ளன, இவை 25–35 மீ உயரம்வரை வளர்கின்றன, மரத்தின் அடிப்பாகம் 3.5 மீ விட்டம் வரை இருக்கும்.

வெளி இணைப்புகள்

யானைக் காது மரம் – விக்கிப்பீடியா

Enterolobium cyclocarpum – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *