மகிழ மரம்

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும். இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும்.

இதன் பழம் சாப்பிட உகந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர்.

இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், மண-எண்ணெய் மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.

சங்க காலம்

திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் இதனை மலைநிலத்தில் புதர் புதராகப் பூக்கும் பூ என்று குறிப்பிடுகிறது.

 • வகுளம் என்பது தலையில் சூடிக்கொள்ளும் ‘உச்சிப்பூ’ என்னும் அணிகலன். இதனைச் ‘சிந்தாமணி’ எனவும் கூறுவர். பாடினிக்குப் பரிசாக சங்ககால மன்னர்கள் வழங்கிய ‘அழல் அவிர் தாமரை’யை இதனோடு ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும். தலை உச்சியில் அணிந்த இந்த அணிகலன் இக்காலத்தில் நெற்றிச்சுட்டியாக மாறியுள்ளது.
 • இந்தப் பூவின் சிறிய உருவம் ன்றறியும், மிகுந்த மணம் பற்றியும் நீதி நூல்கள் பாடியஔவையார் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் காண்க

 • சங்ககால மலர்கள்
 • வெளி இணைப்புகள்

  மகிழ மரம் – விக்கிப்பீடியா

  Mimusops elengi – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.