முருங்கை மரம்

முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு உணவு ஆகும். இதில் “muringa” என்ற பெயர் , “முருங்கை” என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.[சான்று தேவை]

சொற்பிறப்பு

முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.

பயிர் செய்யும் நாடுகள்

முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஆரம்பம் இமயமலை அடிவாரம் பின் பாக்கித்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானித்தான் ஆகும். பிலிப்பைன்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லாந்து, தாய்வானிலும் பயிராகிறது.

வளரியல்பு

முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.

தமிழ்நாட்டிலுள்ள வகைகள்

தமிழ்நாட்டில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை மற்றும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் வேறு சில வகைகளும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளால் குடுமியான் மலை-1, பெரியகுளம்-1 திண்டுக்கல் பகுதியில் உள்ள தெப்பத்துபட்டியிலும் ஆகிய வகைகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்களை அளிக்கத் தொடங்கும். ஒரு மரத்திலிருந்து 200 முதல் 400 காய்கள் வரை கிடைக்கும்.

பயன்கள்

முருங்கைக் காய் நீளமான அளவில் தடி போன்ற வடிவில் இருக்கும். முன்பெல்லாம் சிறிதாக இருந்த முருங்கைக்காய் தற்போது ஒரு மீட்டர் நீளத்திற்கு வளரக் கூடிய அளவில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழர்களிடையே முருங்கைக்காய் பிரட்டல், குழம்பு போன்றவை செய்யப் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை இலை கீரை போல வதக்கி, அல்லது வறுத்து உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது நீர் சுத்திகரிப்பு மற்றும் இதன் நஞ்சு எதிர்ப்பு பண்புகள் மற்றும் சோப்பு பண்புகளால் கை கழுவுதலில் பயன்படுத்த முடியும், மற்றும் பழங்காலத்தில் இருந்து முருங்கை மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.

இந்த பச்சை காய்கறியின் இலைகள் மற்றும் காய்கள், இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாக செயல்படுகிறது. முருங்கைக்காய்களை ரசமாகவோ அல்லது சாறு வடிவத்தில் வழக்கமாக உட்கொள்வதால், முகப்பரு மற்றும் பிற தொடர்புடைய தோல் பிரச்சினைகள் குறைக்கிறது.

வெளி இணைப்புகள்

முருங்கை மரம் – விக்கிப்பீடியா

Moringa oleifera – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *