வழை (Ochrocarpos longifolius) என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும்.
ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.
குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.
வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.
நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.
கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.
குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.
தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்தது.
யானை விரும்பும் தழைமரம்.
மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.
வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.
வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்.
வெளி இணைப்புகள்
சுரபுன்னை மரம் – விக்கிப்பீடியா
Ochrocarpos longifolius – Wikipedia