வெண் மருது (Terminalia arjuna) என்பது ஒருவகை மரமாகும். இது குறிகளான நீள்சதுர இலைகளையும் சாம்பல் நிற வழுவழுப்பான பட்டைகளையும் உடைய ஓங்கி வளரும் பெரிய இலையுதிர் மரம். இதன் பட்டை சதைப்பற்றாக இருக்கும். தமிழக ஆற்றங்கரைகளில் தானாகவே வளர்கிறது. இதில் கருமருது, கலிமருது, பூ மருது என பல்வேறு இனங்கள் உள்ளன. இதன் இலை, பழம், விதை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.திருவிடைமருதூர், திருஇடையாறு ஆகிய திருத்தலங்களில் மருதம் தலமரமாக விளங்குகின்றது.
வெளி இணைப்புகள்
வெண் மருது மரம் – விக்கிப்பீடியா