துஷாரா விஜயன் தமிழ் நடிகை ஆவார். சார்பட்டா பரம்பரை படத்தில் “மாரியம்மா” என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடித்தார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் துஷாரா விஜயன் பெயரும் புகழும் பெற்றார்.
துஷாரா விஜயன் நிஃப்டிலிருந்து பேஷன் டிசைனைப் படிக்கும் போது மாடலிங் செய்யத் தொடங்கினார். 2016ம் ஆண்டு முதல் ஒரு தொழில்முறை மாடலாகவும் நடிகையாகவும் பணியாற்றத் துவங்கினர். அதன் பின்னர் அவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், குறும்படங்களில் பணியாற்றினார்.
ஒரு மாடலாக, துஷாரா விஜயன் பாலம் சில்க், காமதேனு ஜூவல்லரி, 3 ரோஸஸ், கோ-ஆப்டெக்ஸ், தேவி ஜூவல்லரி, மேபெல், எஸ்.கே.சி.எஸ் மற்றும் பசுத் போன்ற சிறந்த பிராண்டுகளின் விளம்பரங்களில் இடம்பெற்றார். 2017 ஆம் ஆண்டில், அவர் சென்னையின் மிஸ் ஃபேஸையும், அதே ஆண்டில் மிஸ் தென்னிந்தியா இரண்டாவது ரன்னர்-அப் விருதையும் வென்றார்.