எதுகை மோனை

எதுகை

யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனைஅது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்

என்பது தொல்காப்பியர் கூற்று.

எடுத்துக்காட்டு :பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்

இக்குறளில் “நீந்துவர்” “நீந்தார்” ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து “ந்” ஒன்றாக அமைவதால் இங்கு எதுகை சுட்டிக் காட்டப்படுகின்றன.

எதுகை வகைகள்

எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.

மோனை

யாப்பிலக்கணத்தில் செய்யுள்களின் சீர்களும், அடிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும் முறையால் தொடைகள் அமைகின்றன. பல வகையாக அமையும் தொடைகளில் மோனை முக்கியமானவற்றுள் ஒன்று.

மோனையும் அதன் வகைகளும்

எழுவாய் எழுத்தொன்றின் மோனை என யாப்பருங்கலக் காரிகையும்,அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை எனத் தொல்காப்பியச் செய்யுளியலும் கூறுகின்றன.

இதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.

எழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.

  • ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.
  • ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்

உயிரெழுத்து இனங்கள்

1. அ, ஆ, ஐ, ஔ

2. இ, ஈ, எ, ஏ, யா

3. உ, ஊ, ஒ, ஓ

உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.

மெய்யெழுத்து இனங்கள்

1. ஞ், ந்

2. ம், வ்

3. த், ச்

எடுத்துக்காட்டுகள்

சீர்மோனைகள்

  1. பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
    இந்த வெண்பா அடியிலே முதற் சீரின் முதல் எழுத்தாக வரும் பா மூன்றாம் சீரின் முதலெழுத்தாகவும் வருகிறது. நாலாஞ்சீரின் முதலெழுத்தாகவும் அதன் உயிரெழுத்து இனமான ப வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும்.
  2. கற்க கசடற கற்றவை கற்றபின்
    இத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் க என்னும் ஒரே எழுத்து மோனையாக வந்துள்ளது. இவ்வாறு அமைவது முற்று மோனை எனப்படும்.

அடிமோனைகள்

தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்


மேலே காட்டிய திருக்குறளில் இரண்டு அடிகளினதும் முதற் சீர்கள் த எனும் எழுத்தில் தொடங்குவதால் இதிலே அடிமோனை அமைந்துள்ளது.
அடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.

வெளி இணைப்புகள்

எதுகை – விக்கிப்பீடியா

மோனை – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *