ஆசியச் சிறுத்தை (Acinonyx jubatus)யையே தமிழகத்தில் வேங்கைப்புலி என அழைக்கின்றனர். இது பெரிய பூனை குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டி ஆகும்.
இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சிறுத்தை வேட்டை மிகப் பெயர் பெற்று இருந்தது.இவற்றின் எண்ணிக்கை 20ம் நூற்றாண்டில் பெருமளவு குறைந்துவிட்டது. 1947ல் மத்திய பிரதேச சுர்குச மன்னர் இச்சிறுத்தையை வேட்டையாடியதே இதை இந்தியாவில் கடைசியாக பார்த்த ஆதாரம். உலகில் இவற்றின் எண்ணிக்கை 70-100 தனியன்களே என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இவை ஈரானிலும் ஆப்கானிசுத்தானிலும் மட்டுமே காணப்படுகின்ற போதிலும், இவற்றிற் பெரும்பாலானவை ஈரானிலேயே வாழ்கின்றன.