சிவிங்கிப்புலி

வேங்கை அல்லது சிவிங்கிப்புலி (Cheetah) பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 112 கிமீ முதல் 120 கிமீ (70 முதல் 75 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும்.


உடல் அமைப்பு


சிவிங்கிப்புலி இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வேங்கையின் தலை சிறியதாகவும், உடல் நீளமாகவும் கால்கள் உயரமாகவும், வால் நீளமாகவும் இருக்கும். இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ்வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிகி எடையும், 112 முதல் 135 செமீ நீளமான உடலும், 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும். ஆனால் ஒரு வேங்கையைத் தனியாகப் பார்க்கும் போது அது ஆணா, பெண்ணா என இனம் பிரித்துக் காண்பது கடினமே.


வசிப்பிடம்


வேங்கை மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். இவை பெரும்பாலும் மரத்திலும், புதர் மறைவிலும் தான் வசிக்கின்றன.


உணவுப்பழக்கம்


வேங்கை வேட்டையாடுதல் மூலமே உணவு தேடிக்கொள்கிறது. மான், குதிரை, முயல் உள்ளிட்ட உயிரினங்களை வேட்டையாடி உண்கிறது.


வாழ்க்கைமுறை


பெண் வேங்கைகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் வேங்கைகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிவிங்கிப்புலியின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. இந்த சிறுத்தைக்குட்டிகள் கழுகுகள், ஓநாய்கள் மற்றும் சிங்கங்களால் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன.


சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.


வேட்டைப் பயன்பாடு


இந்த விலங்கை பழங்காலத்தில் இருந்து மனிதர்கள் பழக்கப்படுத்தி வேட்டைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியத் துணைக்கண்டத்தில் குறுநில மன்னர்கள் பலர் சிவிங்கிப் புலியைப் பழக்கி, வெளிமான், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தினர்.


வெளி இணைப்புகள்

சிவிங்கிப்புலி – விக்கிப்பீடியா

Cheetah – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *