இந்தியச் சிறுத்தை என்பது (Indian leopard, Panthera pardus fusca) இந்தியத் துணைக்கண்டத்தில் பரந்து வாழும் சிறுத்தைத் துணையினமாகும். வாழிடம் இன்மை, இடப்பற்றாக்குறை, களவாடப்படல், தோலிற்காகவும் உடலுறுப்புக்களுக்காகவும் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத வர்த்தகம் போன்ற காரணங்களினால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இச்சிறுத்தையினத்தை 2008 ஆம் ஆண்டில் அருகிய இனம் எனப் பட்டியல்ப்படுத்தியுள்ளது.
ஆசியச் சிங்கம், வங்கப்புலி, பனிச்சிறுத்தை, படைச்சிறுத்தை ஆகியவற்றுடன் இந்தியச் சிறுத்தையும் இந்தியாவில் காணப்படும் ஐந்து பெரிய பூனைகளுள் ஒன்றாகும்.
அழிவுகள்
வனவிலங்கு வர்த்தகம் இந்தியச் சிறுத்தைகளின் இருப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இவ்விந்தியச் சிறுத்தைகளின் தோல் மற்றும் சில உடல் உறுப்புக்கள் இந்தியாவிலிருந்து நேபாளம், சீனா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வாறு களவாடப்படும் இந்தியச் சிறுத்தைகள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
இந்தியச் சிறுத்தை – விக்கிப்பீடியா