இந்திய அணில் (Indian palm squirrel, “Funambulus palmarum”) என்பது ஒரு வகை அணில் ஆகும். இது மூன்று கோடுகளுள்ள அணில் என அழைக்கப்படுகின்றது. இது செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றது. இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மேற்கு ஆவுத்திரேலியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இயற்கையாக மற்ற விலங்குகளால் குறைவாக வேட்டையாடபப்டுவதால் சிறிய தீங்குயிராக மாறி, அழிக்கப்பட இலக்கு வைக்கப்பட்டது. இதன் நெருங்கிய ஐந்து கோடுகளுள்ள அணில் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
வெளி இணைப்புகள்
Indian palm squirrel – Wikipedia