குள்ள அணில் (Least pygmy squirrel) மேலும் பிக்மி அணில் என்றழைக்கப்படுவது அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி இனம் ஆகும். இந்த அணில் ஒரு அகணிய உயிரியாக பெரும்பாலும் 750 மீ (2,500 அடி) உயரத்திற்கு கீழே உள்ள காடுகளில் காணப்படுகிறது. இவை குறிப்பாக தென்கிழக்கு ஆசிய தீவுகளான போர்னியோ, சுமாத்திரா மற்றும் பங்கி தீவுகள் ஆகியவற்றில் கணிசமாக காணப்படுகிறது. ஆப்பிரிக்க குள்ள அணிலைப் போல இது உலகின் மிகச்சிறிய அணில் ஆகும். இதன் மொத்த நீளம் 10–14 செமீ (3.9-5.5) அங்குலம்) மற்றும் 12–26 g (0.42-0.92 oz) எடை கொண்டது.
வெளி இணைப்புகள்
Least pygmy squirrel – Wikipedia