இலங்கைச் சிங்கம்

இலங்கைச் சிங்கம் (Panthera leo sinhaleyus அல்லது பொதுவாக Sri Lanka Lion) வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த இலங்கைக்கே தனிச் சிறப்பான சிங்கங்களின் துணையினமாகும். அது தற்கால மனிதன் நாகரிகமடையத் தொடங்குவதற்கு முன்னரே கி.மு. 37000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.

இலங்கையில் வாழ்ந்த இந்தச் சிங்க இனம் பற்றிய தகவல் குருவிட்ட பகுதியில் பெறப்பட்ட அவற்றின் இரண்டு பற்களிலிருந்தே தெரிய வருகிறது. அப்பற்களின் அடிப்படையில் இவ்வாறான சிங்கங்களின் துணையினமொன்று வாழ்ந்ததாக பவுல் தெரனியகல 1939 இல் நிறுவினார்.

எனினும், அது சிங்கங்களின் ஏனைய இனங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றதெனக் காட்டுவதற்குப் போதிய தரவுகள் இல்லை. இலண்டன், இயற்கை வரலாற்று அருங்காட்சியகக் காப்பகத்தில் உள்ள ஏனைய சிங்கங்களின் பற்களை விட ஒடுக்கமானவையும் கூர்மையானவையுமான அப்பற்கள் தனியான சிங்க இனமொன்றுக்கு உரியனவாக அவர் நியாயப்படுத்திய போதிலும் அவர் அதனைச் சரியான முறையில் விளக்கிக் கூறவில்லை.

வெளி இணைப்புகள்

இலங்கைச் சிங்கம் – விக்கிப்பீடியா

Panthera leo sinhaleyus – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.