சிவப்பு-வயிற்று அணில் (Red-bellied squirrel) அல்லது சுலவேசி பெரும் அணில் (ரப்ரிசியூரசு ரப்ரிவெண்டர் ) என்பது அணில் இனங்களுள் ஒன்று. சமீப காலம் வரை, இது காலோசியூரசு பேரினத்தில் ஒரு இனமாகக் கருதப்பட்டது. ஆனால் 1990 முதல் இது ரப்ரிசியூரசு பேரினத்தின் கீழ் வருகிறது. இது இந்தோனேசிய தீவான சுலாவெசியில் மட்டும் காணப்படும் அகணிய உயிரியாகும். இது சுலவேசியின் வடக்கே உள்ள சங்கீர் தீவிலும் காணப்படுகிறது. இதனுடைய நீளம் 25 செ.மீ. (தலை மற்றும் உடல்). இது ஒரு அணில் விட பெரியது. இது இத்தீவுகளில் காணப்படும் மழைக்காடுகளில் மரத்தின் உச்சியில் வாழ்கிறது.
வெளி இணைப்புகள்
சிவப்பு-வயிற்று அணில் – விக்கிப்பீடியா
Red-bellied squirrel – Wikipedia