சூரிய அணில் (Sun squirrel) (கெலியோசியூரசு பேரினம்), என்பது செரினே துணைக் குடும்பத்தின் கீழ் வரும் புரோட்டோக்செரினி அணிலாகும். இவை துணை சஹாரா ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன.
மரக் கிளைகளில் வெயில் நேரத்தில் படுத்து சூரிய குளியலில் ஈடுபடுவதால் இப்பெயரினைப் பெற்றிருக்கலாம்.
காங்கோ மக்களாட்சிக் குடியரசில் மனிதனில் குரங்கு அம்மை பரவுவதில் இந்த சூரிய அணில் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தப் பேரினத்தின் கீழ் 6 சிற்றினங்கள் உள்ளன: