ஆசியக் கறுப்புக் கரடி

ஆசியக் கறுப்புக் கரடி (Asian black bear) என்பது நடுத்தர அளவுடைய கரடி ஆகும். இது நிலவுக் கரடி, வெள்ளை மார்புக் கரடி எனவும் அழைக்கப்படுகின்றது. இக்கரடி மரங்களில் வசித்து வரும் கரடியாகும். உலகிலுள்ள மிகப்பெரிய மரம் வாழ் விலங்குகளில் இதுவும் ஒன்றாகும். இது இமயமலைப் பிரதேசங்களிலும், இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதிகளிலும், கொரியாவிலும், வட கிழக்குச் சீனாவிலும், சப்பானில் அமைந்துள்ள ஹொன்சு, சிக்கோக்கு ஆகிய தீவுகளிலும், கிழக்கு உருசியாவிலும், தாய்வானிலும் இக்கரடிகள் வசித்து வருகின்றன. இக்கரடியின் விஞ்ஞானப் பெயர் உர்சஸ் திபென்டனுஸ் (Ursus thibetanus) என்பதாகும். இக்கரடியானது உடல் அங்கங்களுக்காகக் கொல்லப்படுவதாலும்,காடழிப்பினாலும் அழிய வாய்ப்புக்கள் உள்ள இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.


பாரம்பரிய மருந்துகளுக்காக இக்கரடிகள் கொல்லப்பட்டும், பொறிவைத்துப் பிடிக்கப்பட்டும் மனிதனின் தீவிரமான தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றன.


உணவு


இவை அனைத்தும் உண்ணும் விலங்குகள் ஆகும். இவை பொதுவாக பழங்கள், மூங்கில் தளிர்கள், சோளம், பெர்ரி பழங்கள், விதைகள், மூலிகைகள், ஆகியவற்றையும் எறும்புகள், கறையான்கள், பறவைகளையும் உண்ணுகின்றன.


சூழலியல்


இக்கரடிகளின் கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் ஆகியவை மந்த நிலையில் காணப்பட்டாலும் நுகரும் திறன் அதிகமாகவே காணப்படுகின்றது. இவை பொதுவாக பகலிலேயே நடமாடுகின்றன எனினும் மனித குடியேற்றங்களுக்கு அண்மித்த பிரதேசங்களில் இவை அனேகம் இரவில் நடமாடுகின்றன. புலிகள், ஓநாய்கள், மண்ணிறக் கரடிகள் ஆகியவையே இக்கரடிகளின் பொதுவான இயற்கை எதிரிகளாகும். இவ்வெதிரி விலங்குகள் இக்கரடிகளின் குட்டிகளை வேட்டையாடுகின்றன. பெண் கரடிகளின் கர்ப்ப காலம் 6 தொடக்கம் 8 மாதங்கள் ஆகும். ஒரு தடைவையில் 1 தொடக்கம் 4 குட்டிகளை இவை ஈனுகின்றன.


வெளி இணைப்புகள்

ஆசியக் கறுப்புக் கரடி – விக்கிப்பீடியா

Asian black bear – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *