புல்லி குத்தா (Bully Kutta) என்பது பாக்கிஸ்தானின் முன்னாள் பஞ்சாப் பிராந்தியத்தில் உருவான ஒரு நாய் இனம் ஆகும்.
சட்டப்பூர்வத்தன்மை மற்றும் நாய் சண்டை
இந்த நாய்களை பாக்கித்தானின் சில பகுதிகளில் தற்போது தடைசெய்யப்பட்ட நாய்ச் சண்டை விளையாட்டுக்குப் பயன்படுத்துகின்றனர். இவை ஆற்றல் வாய்தவையாகவும், போர் திறன்கள், அச்சமற்ற தன்மை மற்றும் செம்மறி மந்தையை காக்கும் ஆற்றல் கொண்டவையாக உள்ளன. இந்த நாய்கள் பாக்கிஸ்தானில் செம்மறி ஆடுகளை காக்கும் பாதுகாவல் நாயாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக இந்த இன நாய் இந்தியா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, மத்திய ஆசியா போன்ற நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இது சண்டை நாயாகப் பயன்படுத்தப்படுகிறது.
பிரபல கலாச்சாரத்தில்
நியூயார்க் டைம்சின் பிரபலமாக விற்பனையாகும் நூலாசிரியரின் கிரெக் ஐல்ஸ் 2009 இல் எழுதிய புதினமான, தி டெவில்ஸ் பன்ச்பவுல் என்ற நாவலில் இந்த நாய் இனம் சித்தரிக்கப்பட்டது.
வெளி இணைப்புகள்
புல்லி குத்தா – விக்கிப்பீடியா