கரடி

கரடி (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Bear), ஒரு ஊனுண்ணிப் பாலூட்டி விலங்கு இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) என்னும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகள் யாவற்றினும் மிக பெரியது ஆகும் . ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன. துருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. எஸ்கிமோக்களின் மொழியில் “ஆர்க்டோஸ் (Arctos) என்றால் கரடிகளின் பிரதேசம் என்று அர்த்தம். இதனால்தான் வட துருவப் பகுதிக்கு “ஆர்க்டிக்’ என்ற பெயர் வந்தது.


உயிரின அறிவியலார் கரடியினத்தை ஊர்சிடே (Ursidae) என்னும் பெரும் பிரிவில் காட்டுவர். ஊர்சசு (Ursus) என்றால் இலத்தீன் மொழியில் கரடி என்று பொருள். இதன் அடிப்படையில் ஊர்சிடே என்பது இவ்வினத்தைக் குறித்தது. இந்த ஊர்சிடேயின் உட்பிரிவில் ஐந்தே ஐந்து இனங்கள் தாம் உள்ளன. அவற்றுள் நான்கினுடைய உட்பிரிவில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகைதான் உள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. கரடிகளின் கண்கள் சிறிதாக இருக்கும். இவை, குறைந்த பார்வைத் திறன் உடையவை ஆனால் நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை; உடலில் அதிக முடிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டு கால்களினால் நிற்க வல்லவை. கரடிகள், வேட்டையாடவும் எதிரிகளைத்தாக்கவும் நீண்டு வளைந்திருக்கும் தங்கள் கூரான நகங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த நகங்களில் சகதியும் அழுக்கும் சேர்ந்திருக்கும். பாக்டீரியாக்கள் மிகுந்திருக்கும். எனவே இவற்றால் தாக்கப்படுபவரின் காயங்கள் எளிதில் குணமடையாது.


கரடிகள் சராசரியாக நான்கு அடி உயரமும் நூற்றுப் பதினைந்து கிலோ எடையும் கொண்டவை. தோலுக்காகவும், மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படும் அவற்றின் கணையத்திற்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன. கோடை காலத்தில் கரடிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் கர்ப்ப காலம் ஏழு மாதங்கள். ஒரு முறையில் இரண்டு குட்டிகள் பிறக்கும். குட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகும் வரை அம்மாக் கரடிகள்தான் முதுகில் தங்கள் குட்டிகளைச் சுமந்து செல்லும். குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும் கரடிகள் மிகக் கடுமையான குளிர்காலம் முழுவதையும் ஆழ்ந்த உறக்கத்திலேயே (Hibernation ) கழித்துவிடுகின்றன. துருவப் பகுதியில் வாழும் கரடிகள் பல மாதங்கள் இப்படி உறங்கும் தனித்துவமான தன்மை கொண்டவை. அவ்வாறு உறங்கும் போது இவற்றின் உடலில் இருக்கும் சக்தி விரயமாகாமல் இருப்பதற்காக இவற்றின் இதயத் துடிப்பு மிகவும் குறைந்துவிடும். இவ்வாறு சுய நினைவு இல்லாமல் இருக்கும் நிலையில் இவை குட்டிகளை ஈனுகின்றன. துருவக் கரடிகள் ஒரு முறையில் ஒன்றிலிருந்து மூன்று குட்டிகள் ஈனும்.


கரடி இன வகைகள்


  • பனிக்கரடி

  • கொடுங்கரடி

  • அமெரிக்கக் கருங்கரடி

  • வெண்கண்வளையக் கரடி இரு கண்களைச்சுற்றியும் இருவெள்ளையான வளையம் இருப்பதால் இதனை மூக்குகண்ணாடிக் கரடி என்றும் அழைப்பர்.

  • அசையாக்கரடி சுலாத்துக் கரடி (Sloth bear)

  • ஆசியக் கருங்கரடி

  • மலேயக் குறுங்கரடி யாவற்றினும் சிறிய கரடி.

  • வாழ்விடங்களும் வாழ்வியலும்


    உணவு


    கரடிகள் இலை தழைகள் மற்றும் மாமிசம் போன்றவற்றையும் உண்ணும் அனைத்தும் உண்ணியாகும். பெரும்பாலும் பழங்கள், பழ வித்துக்கள், தண்டுகள், சில குறிப்பிட்ட இலைகள், மரப்பட்டைகள் போன்றவற்றை உண்ணுகின்றன. கரடிகள்,மனிதர்களைவிடவும் தாவரவியல் அறிவு மிகுந்தவை. எந்தப் பருவத்தில் எந்த வகைக் காய்கனிகள் எங்கே கிடைக்கும் என்பதைக் கரடிகள் நன்றாக அறிந்திருக்கின்றன. இவை, நாவற்பழத்தை மிகவும் விரும்பி உண்ணும். மரங்களின் உச்சிவரை எளிதில் ஏறும் திறன் கரடிக்கு உண்டு. கரடிகளுக்கு தேனையும் மிகவும் விரும்பி உண்ணும். மலைக் குகைகளிலும், மரங்களின் உச்சிகளிலும் உள்ள தேன் கூடுகளை தேனுக்காக கரடிகள் பெற்றுக்கொள்ளும். இது கரையானையும் விரும்பி உணவாகக் கொள்கின்றன. கரடிகள் கரையான் புற்றில் வாய் வைத்து மிகுந்த ஓசையுடன் கரையான்களை அப்படியே உறிஞ்சிவிடும் திறன் கொண்டவையாகும். கரடிகள் சராசரியாக நான்கு அடி உயரமும் நூற்றுப் பதினைந்து கிலோ எடையும் கொண்டவை. தோலுக்காகவும், மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படும் அவற்றின் கணையத்திற்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன. கோடை காலத்தில் கரடிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் கர்ப்ப காலம் ஏழு மாதங்கள். ஒரு முறையில் இரண்டு குட்டிகள் பிறக்கும். குட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகும் வரை அம்மாக் கரடிகள்தான் முதுகில் தங்கள் குட்டிகளைச் சுமந்து செல்லும்.


    குரலெழுப்புதல்


    கரடிகள் பல்வேறு வகையான சத்தங்களை எழுப்புகின்றன.


  • முனகும் – ஆபத்துக்களின் போது அல்லது பயத்தின் போது.

  • குரைக்கும் – எதிரிகளை விரட்டும் போது.

  • உறுமும் – கோபத்தின் போது.

  • கர்ச்சிக்கும் – அச்சுறுத்தும் போது

  • வானவியல்


    வானவியலில் பெருங்கரடி எனும் உடுத்தொகுதி காணப்படுகிறது. இந்த உடுத்தொகுதியின் முழுமையான வடிவம் ஒரு கரடியின் வடிவத்தை ஒத்திருப்பதால் இப்பெயர் வழங்கப்பெற்றது.


    நூல்களில் கரடி


    கரடி, இந்து தொன்மவியலில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இதிகாசங்களில் ஓர் இனக்குழுவாகவும், அவ்வினத்தின் தலைவராக ஜாம்பவான் என்பவரும் குறிப்பிடப்படுகிறார். அவருடைய மகளாக சாம்பி என்பவள் குறிப்பிடப்படுகிறார்.


    “ருட்யார்ட் கிப்ளிங்’ எழுதிய “ஜங்கில் புக்’ என்னும் நாவலில் வரும் கரடியை முக்கிய இடம்பெறுகிறது.இதே நாவலை “வால்ட் டிஸ்னி’ கார்ட்டூன் திரைப்படமாகத் தயாரித்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் “பாலு’ என்னும், எதற்கும் கவலைப்படாத மகிழ்ச்சியான கரடிக் கதாபாத்திரம் அனைவராலும் விரும்பப்பட்டதாகும்.


    தமிழில் “கரடி” என்ற சொல் பாவனை


  • கரடி சந்தை

  • ‘கரடி’ விடுறது

  • சிவபூசையில் ‘கரடி’ போல

  • கரடிபோலே வந்து விழுந்தான்

  • கரடிக்கூடம்

  • கரடிப்பறை

  • கரடிகை

  • கரடியுறுமல்

  • கரடிவித்தை

  • வெளி இணைப்புகள்

    கரடி – விக்கிப்பீடியா

    Bear – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *