சிவிங்கிப் பூனை அல்லது சிவிங்கி(ஆங்கிலம்: Lynx) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள காட்டுப் பூனையாகும். இதில் நான்கு இனங்கள் உள்ளன. இவை புவியின் வட பகுதியில் குறிப்பாக வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வாழ்கிறது. இந்தியாவில் சம்மு காசுமீர் பகுதியில் அரிதாகக் காணப்படுகிறது.
இது மாக்கடோனியக் குடியரசின் தேசிய விலங்காகும்.
தோற்றம்
சிவிங்கிப் பூனை குறுகிய வால் கொண்டு, நீண்ட கால்கள், பனிக் கட்டிகளில் நடப்பதற்கேற்ற பாதங்கள், காதுகளில் கொத்தான முடி, முகத்தில் மீசைபோன்ற முடிக்கற்றைகள், போன்றவற்றுடன் இருக்கும். உடல் நிறம் மங்கிய பழுப்பு அல்லது சாம்பல் நிறமுடையதாகவும், ஆங்காங்கே பழுப்பு நிறப்புள்ளிகள் கொண்டிருக்கும். இவை உயரமான இடங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் புதர்கள், நாணல் செடிகள், புற்கள் போன்றவை அடர்தியாக நிறைந்த பகுதியில் காணப்படுகின்றன. இவை நன்கு மரமேறவும், நீந்தவும் தெரிந்தவை. இது பெரும்பாலும் பறவைகளையும், சிறியவகை பாலூட்டிகளையும் வேட்டையாடுகிறது. அவ்வப்போது ஆடுகளையும் பதம்பார்க்கும்.
வெளி இணைப்புகள்
சிவிங்கிப் பூனை – விக்கிப்பீடியா