புத்திசாலி ஹான்ஸ் (Clever Hans (in செருமனியம்: der Kluge Hans) என்பது ஒரு ஆர்லோவ் டிரோடர் குதிரை ஆகும். இதனால் கணிதம் மற்றும் பிற அறிவார்ந்த பணிகளைச் செய்ய முடிந்தது என்று கூறப்பட்டது. குதிரையிடம் ஒரு கணக்கைக் குறிப்பிட்டு அதற்கான விடையைக் கேட்டபோது அந்த விடையைக் குறிப்பிட அந்த எண்ணிக்கைப்படி தன் காலால் தட்டித் தெரிவித்தது.
1907 ஆம் ஆண்டு உளவியலாளர் ஒஸ்கார் பிபங்ஸ்ட் என்பவர் இது குறித்து நடத்திய ஒரு முறையான ஆய்வுக்குப் பின்னர், இந்தக் குதிரை குறித்து நிலவிவந்த புதிரைக் கண்டறிந்து, இந்தக் குதிரையானது உண்மையில் கணக்குகளைப் போடவில்லை என்பதை நிரூபித்தார். அதாவது குதிரையானது தனிடம் கேள்வி கேட்பவரின் சைகையைக் கவனித்து அதன்படி நடந்துகொண்டது என்பதே ஆகும். அவர் தன் ஆராய்ச்சி முறையின்படி, இந்தக் குதிரையானது கேள்வியைக் கேட்பவரைப் பார்த்து, பிறகு நிதானமாகத் தன் காலால் தரையைத் தட்டத் துவங்குகிறது. சரியான விடையை நெருங்கும்போது கேள்விக் கேட்டவர் இது சரியாக பதிலை அளித்துவிடுமோ என தன் உடல் மொழியிலும் அவரின் முகபாவத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கணித்தும் தட்டுவதை நிறுத்திவிடுகிறது. இதைக் கண்டு கேள்வி கேட்டவர் அது சரியான விடையை அளித்துவட்டதாக நம்பிவிடுகிறார்.
வெளி இணைப்புகள்
ஹான்ஸ் குதிரை – விக்கிப்பீடியா