இமயமலை பழுப்புக் கரடி (Himalayan Brown Bear) என்பது ஒரு கரடி இனமாகும். இது பழுப்புக் கரடியின் கிளையினம் ஆகும். இந்த கரடிதான் தொன்மங்களில் கூறப்பட்ட எட்டி (மனிதன்) என்று கருதப்படுகிறது.
விளக்கம்
இமாலயப் பழுப்பு கரடிகளின் உடல் பருமன் பாலினரீதியாக வேறுபாடு கொண்டது. ஆண் கரடிகள் 1.5மீ இருந்து 2.2மீட்டர் (4 அடி 11 அங்குலம் – 7 அடி 3 அங்குலம்) நீளமுடையவை. பெண் கரடிகள் 1.37 மீட்டர் முதல் 1.83 மீட்டர் (4 அடி 6 அங்குலம் – 6 அடி) வரை இருக்கும். இவைதான் இமயமலையில் வாழக்கூடிய பெரிய விலங்குகள் ஆகும்.
பரவல்
இந்த கரடிகள் நேபாளம், திபெத், வட இந்தியா, வடக்கு பாக்கித்தான் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை ஏற்கனவே பூட்டானிலிருந்து அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
நடத்தை மற்றும் சூழலியல்
இவை கரடிகள் அக்டோபர் காலகட்டத்தை ஒட்டிய காலத்தில் பனிக்கால உறக்கம் மேற்கொள்கினறன. ஏப்ரல், மே மாதங்களில் வெளிப்படுகின்றன. அதுவரை பொதுவாக இந்த கரடிகள் குகைகளில் உறக்கத்தை மேற்கொள்கின்றன.
உணவு
இமாலயப் பழுப்பு கரடிகள் அனைத்துண்ணி ஆகும். இவை புற்கள், வேர்கள், தாவரங்கள், பூச்சிகளையும், சிறிய பாலூட்டிகள், பழங்கள் போன்றவற்றை விரும்பி உண்கின்றன. சில சமயம் ஆடுகளையும் வேட்டையாடுகின்றன. வயதுவந்த கரடிகள் சூரிய உதயத்திற்கு முன் அல்லது பிற்பகலின் போது சாப்பிடுகின்றன.