ஐபீரிய சிவிங்கிப் பூனை (ஆங்கிலப் பெயர்: Iberian lynx, உயிரியல் பெயர்: Lynx pardinus) என்பது ஒரு வகை காட்டுப் பூனை ஆகும். இது தென்மேற்கு ஐரோப்பாவின் ஐபீரிய மூவலந்தீவுப் பகுதியில் வசிக்கிறது. இது கிட்டத்தட்ட எப்பொழுதுமே ஐரோப்பிய குழிமுயலையே உணவாகக் கொள்கிறது. 20ம் நூற்றாண்டில் நோய், அதிகப்படியான வேட்டையாடுதல், புல்வெளிகள் மற்றும் காடுகளின் அழிப்பு, மற்றும் சட்டவிரோத வேட்டை ஆகியவற்றின் காரணமாக குழிமுயல்களின் எண்ணிக்கை குறைந்ததனால் இதன் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
வெளி இணைப்புகள்
ஐபீரிய சிவிங்கிப் பூனை – விக்கிப்பீடியா