பக் (pug) சண்டைக்காரன் என்ற பொருள் தரும் இந்த கலப்பின நாய்களின் இனமானது, தனித்துவமான உடல் தன்மைகளைப் பெற்றிருக்கும். இதன் தோலானாது சுருக்கங்களுடனும், குட்டை முகத்தசைகளுடனும், வாலில் சுருள் அமைப்பிலும் காணப்படும். பெரும்பான்மையான குட்டிகள் நன்கு வளர்ந்த தோலுடனும், கருப்பு கலந்த பழுப்பு நிறமுடனும், குட்டையான சமச்சதுர உடலையும் பெற்று இருக்கும். இருப்பினும், வளர்ந்த நாய்களில் பல நிறங்கள் காணப்படுகின்றன.மேற்கு ஐரோப்பாவுக்கு, குறிப்பாக நெதர்லாந்துக்கு, இந்த நாயானது, சீனாவில் இருந்து, ஆறாம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டதெனக் கருதப்படுகிறது. இங்கிலாந்து நாட்டிற்கு, ஒன்பதாம் நூற்றாண்டில் வளர்க்கப்படத் தொடங்கியது. குறிப்பாக, விக்டோரியா மகாராணியால்,பெருமளவு பாசத்துடன் வளர்க்கப்பட்டன. அம்மகாராணிக்குப் பிறகு அவரது குடும்பத்தினரும், இந்த கலப்பின நாய் வகையை வளர்த்தனர். இந்த நாயின் குணமானது, தனது எசமானனிடம் பாசமாகவும், தோழமையுடனும், மென்மையாகவும் பழகும் இயல்புடையதாக இருக்கும். ஒரு அமெரிக்கச் சங்கமானது ( American Kennel Club), இந்த நாய் “கோபப்படும் இயல்புடையதாக இருந்தாலும், இதன் குணமனாது வனப்புடன்” இருப்பதாகக் கூறுகிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரை, இந்த நாயானது பல புகழ் பெற்ற நபர்களாலும், ஆளுமைகளாலும் வளர்க்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற, உலக நாய்த் திருவிழாவில் (World Dog Show) இந்த பக் நாயினமே சிறந்து எனத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தது.
தோற்றம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்த நாயினமானது, ஒரு நீளமான, மெலிதான ஓவியம் போன்ற கருதப்பட்டது. பெரும்பான்மையான, இதன் கலப்பின நாயினமானது, சற்று பருத்து, கனச்சதுரம் போன்றே காணப்படும். இதன் நெஞ்சுப்பகுதியான சற்று குழிந்தும், நன்கு வளர்ந்த தசைப்பிடிப்படனும் காணப்படும். இளம் குட்டிகளின் தோலானது மென்மையாகவும், பளபளப்புடனும் ஆப்ரிகாட் பழ நிறத்துடனும், வெண்மையான நிறத்துடனும், கருநிறத்துடனும் காணப்படுகின்றன. கருமையான வரிகள் பின்தலையில் இருந்து, வால் வரை நீண்டு இருந்ததற்கு உரிய, தோற்ற அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்த இன நாயின் வாலானது, அதன் இடுப்பினை நோக்கி, இறுக்கமாகச் சுருண்டு அமைந்துள்ளது.
இதன் காதுகளானது இருவித வடிவங்களைக் கொண்டு வேறுபட்டு காணப்படுகின்றன. ஒன்று ரோசா போலவும், பொத்தான் போலவும் இருக்கின்றன. ரோசா காதுகள் சிறிய வடிவத்தில் இருக்கும். இருப்பினும் பெரும்பான்மையான இந்த நாயினங்களில் காதுகளாது பொத்தான் போன்றே சற்று பெரியதாக ஒப்பிட்டு அளவில் இருக்கும். அதாவது, ரோசாக் காதுகளை விட, இந்த பொத்தான் காதுகள் பெரியதாக அமைந்து இருக்கும். இக்காதுகள், தலையின் பக்கவாட்டில், நுனி வளைந்து, இயல்பாகவே அமைந்து இருக்கும்.
இந்த ‘பக்’ இன நாய்களின் கால்கள் உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் நீண்டும், நடுத்தரமான உயரத்துடனும், அமைப்புடன் காணப்படுகின்றன. இதன் தோள்களானது, சற்று நடுத்தரமாக, பின்னோக்கி சரிந்து இருக்கும். இந்த நாயின் கணுக்கால்களானது, சிறியதாகவும், உறுதியுடனும், நன்கு பிளவு ஆகக்கூடிய பாதங்களையும், அதிலுள்ள விரல்கள் கருமை நிறத்துடனும் அமைந்து இருக்கின்றன. கீழ்தாடையில் உள்ள பற்களானது, பொதுவாக, மேற்புறப் பற்களை விட, புடைத்து, வெளியில் நீட்டிக் கொண்டு இருக்கின்றன. இந்த அமைப்பினால், கடிக்கும் போது, இரு பற்தாடைகளும் ஒட்டாது.
நடத்தை
இந்த இனத்தை பெரும்பாலும் இலத்தீன் சொற்றொடரான பர்வோவில் (parvo) என்பதில் இருந்துத் தோன்றியதாகக் கருதுவர். இந்நாயினத்தை,”சிறியதில் மிகச்சிறியது” என்றோ, “ஒரு சிறிய இடத்தில் நிறைய நாய்” என்றோ அழைப்பர். சிறிய அளவிலான போதிலும், இதன் குறிப்பிடத்தக்க மற்றும் அழகான ஆளுமையைக் குறிக்கிறது. இந்த வலுவான இனம், அரிதாகவே முரண்டு பிடிக்கும்.குழந்தைகளுடன் நன்கு பழகுவதால், குடும்பங்களுக்கு ஏற்றதது. அவற்றின் உரிமையாளரின் மனநிலையைப் பொறுத்து, அமைதியாகவே இருக்கும. ஆனால் உயிரோட்டமான இதனை, கிண்டலும் செய்வார்கள். இந்த இனமானது, அவற்றின் உரிமையாளரின் ஆளுமையை ஆர்வமாக விரும்புகின்றன. இந்த இனமானது, விளையாட்டுத்தனமானவையாகவும், மனிதத் தோழமையுடனும் வளர்க்கின்றன. அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து, கவனத்தையும் பாசத்தையும் விரும்புகின்றன.
இனப்பெருக்கம்
இந்த இனத்தின், கர்ப்ப காலம் சராசரியாக 63 நாட்கள் நீடிக்கும். பக்கிற்கான பிறக்கும் சராசரி அளவிலான குட்டிகள், 4 முதல் 6 நாய்க்குட்டிகள் ஆகும், இருப்பினும் இது 1 முதல் 9 வரை குட்டிகளை ஈனும் உடல் இயலபைப் பெற்று இருக்கிறது.