மார்வாரிக் குதிரை

மார்வாரி (Marwari) அல்லது மலானி (Malani) ஓர் அரிதான குதிரை இனம். இவை இந்தியாவின் மார்வார் (அல்லது ஜோத்பூர்) பகுதியைச் சேர்ந்தவை. உட்புற வளைந்து நுனிகள் தொட்டுக்கொள்ளும் காதுகள் இந்த குதிரைகளின் சிறப்பு. இவை பல குதிரையின நிறங்களில் இருந்தாலும், கருப்பும் வெண்மையும் கலந்த திட்டு திட்டாக உள்ளவையும் வெண்ணிறப் பட்டைத்தோல் அமைப்பு கொண்டவையும் வாங்குவோர் மற்றும் வளர்ப்பவர்களிடையே மிகவும் பிரபலம். மார்வாரி குதிரைகள் அதன் கடினத்தன்மைக்காக அறியப்படுகிறது. மேலும் மார்வரியின் தென்மேற்கில் உள்ள கத்தியவார் பகுதியின் மற்றொரு இந்திய இனமான கத்தியவாரியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. மார்வாரிக் குதிரைகள், இந்திய குதிரைகள் மற்றும் அரேபிய குதிரைகளின் (குறிப்பாக மங்கோலிய குதிரைகள்) கலப்பினால் உருவானவை.


மேற்கு இந்தியாவின் மார்வார் பகுதியின் பாரம்பரிய ஆட்சியாளர்களான ராத்தோர்கள், மார்வாரி இனப் பெருக்கத்தை முதன்முதலில் செய்தனர். 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, அவர்கள் கண்டிப்பான இனப்பெருக்கம் செய்தனர். இதன் மூலம் கலப்பிலா மற்றும் கடுமையான மார்வாரிக் குதிரை இனம் உருவானது. மார்வார் பிராந்திய மக்களால் இவைகுதிரைப்படையில் வரலாறு முழுவதும் பயன்படுத்தப்பட்டன. மார்வாரி, போரில் அதன் விசுவாசத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தியது.


1930 களில் இந்த இனங்களின் இனப்பெருக்கம், மோசமான நிர்வாக நடைமுறைகளால் குறைந்தது. ஆனால் இன்று அதன் புகழ் மீண்டுள்ளது. மார்வாரிக் குதிரைகள் குறைந்தளவு பாரமிழுக்கவும் வேளாண் வேலைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் சவாரி மற்றும் பேக்கிங் (packing) செய்ய பயன்படுத்தப்படுகிறது. 1995 இல், இந்தியாவில் மார்வாரிக்கு ஒரு இனப்பெருக்க சமூகம் உருவானது. மார்வாரியின் ஏற்றுமதி பல ஆண்டுகள் தடை செய்யப்பட்டது, ஆனால் 2000 க்கும் 2006 க்கும் இடையில், சிறிய எண்ணிக்கையிலான ஏற்றுமதிகள் அனுமதிக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டிலிருந்து, இந்தியாவிற்கு வெளியில் மார்வார்யின் அயல்நாட்டு நுழைவுச்சான்று சிறிய எண்ணிக்கையில் கிடைக்கிறது. மார்வாரிக் குதிரைகள் அரிதாக இருப்பினும், இந்தியாவிற்கு வெளியே அவைகளின் தனித்துவமான தோற்றம் காரணமாக மிகவும் பிரபலமாகி வருகின்றன.


வெளி இணைப்புகள்

மார்வாரிக் குதிரை – விக்கிப்பீடியா

Marwari horse – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *