பெகாசசு(Pegasus) என்னும் பறக்கும் குதிரை( பண்டைய கிரேக்கம் : Πήγασος, Pēgasos; லத்தீன் : Pegasus) என்பது ஒரு கற்பனை உயிரினம் ஆகும். கிரேக்கத் தொன்மவியலில் இடம் பெற்றுள்ள இந்தக் குதிரை தூய வெள்ளை நிறத்தில், சிறகு உள்ள தெய்வீக குதிரை ஆகும்.
பெகாசின் கதை
பாம்புகளை தலையில் கொண்ட மெடூசாதான் இதன் தாய்.பிறக்கும்போதே அதன் அம்மா மெடூசா இறந்துவிட்டாள் இதனால் பறக்கும் குதிரையைக் கட்டுப்படுத்த யாருமே இல்லை எனும் நிலை ஏற்பட்டது. இதனால், முரட்டுத்தனம்மிக்க உயிரினமாகப் பறக்கும் குதிரை விளங்கியது.
கிரேக்கத் தொன்மத்தில் இடம்பெற்ற ஒரு வீரனான பெல்லரோபான் என்பவன் முரட்டுத்தனமிக்க இந்த பறக்கும் குதிரையை அடக்கி, அதை வாகனமாக பயன்படுத்திக்கொண்டான். இந்த இருவரும் சேர்ந்து பல சாகசங்களைச் செய்தனர். பலரைக் கொன்ற ஆபத்தான சிமேரா என்ற கொடிய விலங்கை பெல்லரோபான் பறக்கும் குதிரையில் சவாரி செய்து கொன்றான்.
இந்நிலையில் யாருமே செல்லக் கூடாது எனத் தடைவிதிக்கப்பட்டிருந்த ஒலிம்பஸ் மலைச் சிகரத்தில் பெல்லரோபான் பறக்கும் குதிரையுடன் சவாரி செய்தான். அப்படிப் போக முயன்றதால் பெல்லரோபானை சியுசு கடவுள் தண்டிக்கும்விதமாக பறக்கும் குதிரையிலிருந்து கீழே தள்ளிவிட்டார். இதனால் பெல்லரோபானுக்குக் காலில் ஊனம் அடைந்தான். பிறகு ஒலிம்பசு மலையில் பறக்கும் குதிரைக்கு சியுசு கடவுள் மின்னலைப் பிடித்து அதன் ஆற்றலை கொண்டுவந்து தரும் வேலையைத் தந்தார்.
தோற்றம்
கிரேக்கப் புராணக் கதைகள் மூலமாகப் பிரபலமானது “பெகாசஸ்”. தூய வெள்ளை நிறம் கொண்டு பறவை போல சிறகுகள் உள்ள குதிரை பெகாசஸ்.
சின்னம்
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் நாட்டினர் பயன்படுத்திய பாரசூட்டுகளில் பெல்லரோபான், பறக்கும் குதிரை மீது அமர்ந்திருக்கும் படம் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது.