பனிக்கரடி

பனிக்கரடி (துருவக் கரடி, polar bear), நில உருண்டையின் கடும் உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் வெண்ணிறக் கரடி இனமாகும். ஆர்ட்டிக்கு மாக்கடல் என்று இவ் உறைபனிப் பகுதியைக் கூறுவதால், இக்கரடியை வெண் கடற்கரடி என்றும் ஒரோவொருக்கால் கூறுவதுண்டு. இது இறைச்சி உண்ணும் ஊனுண்ணிப்பாலூட்டி. இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்லது. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம் எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் (வசந்த) காலத்தில் கருத் தரிக்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும். பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. உலகில் ஏறத்தாழ 20000 பனிக் கரடிகள் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.


இதற்கு இயற்கையான வாழிட எதிரிகள் ஏதும் இல்லை (மாந்தனைத் தவிர). கடுங்குளிர்ப்பகுதியாகிய ஆர்ட்டிக்கு நிலத்தில் வாழ முற்றிலும் பழக்கப்பட்டது. 70,000 ஆண்டுகளுக்கு முன்னரான பழைய தொல்படிமப் பதிவுகள் அல்லது தொல்லுயிர் எச்சங்கள் (fossil records) ஏதும் இல்லை எனச் சொல்லப்படுகிறது.


வாழிடம், வாழ் எல்லை, வாழ்முறை


இனப்பெருக்கக் காலங்களில் பெண் கரடியுடனும், குட்டிகளுடனும் இருந்தாலும், பனிக்கரடிகள் பொதுவாக தனியாக வாழும் விலங்குகள். ஒரோவொருக்கால் பெரும் திமிங்கிலமோ, வால்ரசுகளோ உண்ணக் கிடைக்கும் பொழுது, 20-30 கரடிகள் போல ஒரே இடத்தில் பார்க்கலாம்.


இவை ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் வாழும்


வேட்டையாடும் போது போலார் கரடிகள் தங்கள் உள்ளங்கையால் மூக்கை மூடிக் கொள்ளும். இவற்றின் உடம்பு வெள்ளையாய் இருந்தாலும் மூக்கு கருப்பாய் இருந்து காட்டிக் கொடுத்துவிடும். மூக்கை மறைப்பதன் மூலம் பனிப் படர்ந்த ஆர்டிக் நிலப்பரப்பில் தன்னைத் தெரியாதவாறு வேட்டையாடும்.


புதிதாய் பூமியைப் பார்த்த போலார் கரடிகள் சிறியனவாய் இருக்கும். கடுங்குளிரை தாக்குப் பிடிக்க, அவைகள் மிக விரைவாக குண்டாக கொழுப்பு சத்துடன் இருக்க வேண்டும். இயற்கையிலேயே அவற்றின் தாய்ப்பால் மிக செழுமையாகவும், பாதி பங்கு கொழுப்பு சத்து கொண்டதாகவும் இருக்கிறது.


வெளி இணைப்புகள்

பனிக்கரடி – விக்கிப்பீடியா

Polar bear – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *