சைபீரிய அசுக்கி என்பது உழைக்கும் நாய் இனங்களில் ஒன்றாகும். இவைகள் இழுநாய்களாக பயன்படுகின்றன.
தோற்றம்
கம்பளி போன்ற தோலுடனும் முக்கோண செவிகளுடனும் உடலில் பல்வேறு குறிகளைக் கொண்ட இவ்வகை நாயினம் வடகிழக்கு ஆசியாவின் சைபீரியாவில் வாழும் ச்சுக்சி மக்களினால் இழுநாய்களாக பயன்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சைபீரிய ஆர்ட்டிக் பகுதியின் குளிர்மையான தட்பவெப்பத்திற்கேற்ப தடிமனான தோலுடனும் கம்பளிமுடியுடனும் சுறுசுறுப்பான பண்புடனும் இந்நாய்கள் இருக்கின்றன. குரைத்தலைக் காட்டிலும் இவை மிகுதியாக ஊளையே இடும்.
அறிமுகம்
வில்லியம் கூசக் என்கிற உருசிய மயிர் வணிகர் சைபீரிய அசுக்கி நாயினத்தை முதன் முறையாக அலாசுக்கா மாகாணத்தில் போட்டி ஒன்றின் போது இழுநாய்களாக அறிமுகப்படுத்தியதாகத் தெரிகிறது. அறிமுகத்திற்கு பிறகு, ஆராய்ச்சிகளில் பனிச்சறுக்கு பந்தயங்களிலும் இந்நாய்கள் இழுநாய்களாக பயன்பட்டன. தற்போது செல்லப் பிராணியாக வீட்டிற்குள் வைத்து வளர்க்கப்படுகிறது.
வெளி இணைப்புகள்
சைபீரிய அசுக்கி – விக்கிப்பீடியா